குறைந்த விலையில் நடவு இயந்திரங்கள் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு, கான்சாபுரம், நெடுங்குளம், மகாராஜபுரம், இலந்தை குளம், குமாரபட்டி, கோட்டையூர், சுந்தரபாண்டியபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 7,400 ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இந்நிலையில் விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். அதில் முதலில் சம்பா பயிர்கள் அறுவடை முடிந்து இரண்டாவதாக கோடைகால நெல் சாகுபடியை தொடங்கியுள்ளோம்.
தற்போது கண்மாயில் அதிக அளவில் தண்ணீர் இருப்பதால் டிராக்டர் மூலம் வயல்களை உழுது நாற்றுகளை பாவி வருகிறோம். எனவே மாவட்ட நிர்வாகம் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும் வகையில் பயிர்களை நடுவதற்கான இயந்திரங்களை குறைந்த விலையில் வழங்க வேண்டும் என விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால்