வேலூர் சிறையில் இருந்து ஆயுள் தண்டனை கைதி நந்தா (எ ) முத்துக்குமார் திடீரென்று காணாமல் போய்விட்டார். சிறையிலுள்ள ஆலோசனை கூட்டத்தை சுத்தம் செய்ய முத்துக்குமார் உள்ளிட்ட 21 கைதிகள் ஈடுபட்டுள்ளனர். ஆனால் உணவு இடைவேளையின்போது 20 பேர் மட்டுமே இருந்துள்ளதை கண்டு சிறை காவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முத்துக்குமார் மாயமானதை சிறை காவலர்கள் கண்டறிந்துள்ளனர். தற்போது சிறைக்காவலர்கள் அடங்கிய இரண்டு குழுக்கள் முத்துக்குமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.