கேரளா அரசு பேருந்துகளில் செல்போன் உள்ளிட்ட பிற எலக்ட்ரானிக் சாதனங்களை பயன்படுத்தி சத்தமாக பாடல்களை இசைக்கவோ, பயணத்தின் போது சத்தமாக பேசவோ தடை செய்துள்ளது.
இந்தியாவில் ரயில் பயணத்தின்போது சக பயணிகளுக்கு அசௌகரியங்கள் ஏற்படுத்தும் வகையில் சில விஷயங்கள் நடக்கின்றது. அதாவது குடும்பத்தினருடன், நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டு போவது, பாட்டு பாடுவது, நடனம் ஆடுவது, செல்போனில் சத்தமாக பேசுவது, பாட்டு கேட்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது மற்ற பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும்.
இதனால் கேரள அரசு “பேருந்துகளில் செல்போன் உள்ளிட்ட பிற எலக்ட்ரானிக் சாதனங்களை பயன்படுத்தி சத்தமாக பாடல்களை இசைக்கவும் பயணத்தின் போது சத்தமாக பேசுவதை” தடை செய்துள்ளது. மேலே குறிப்பிட்டுள்ளவாறு பேருந்துகளில் நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்நிலையில் கேரள அரசு போக்குவரத்து துறையின் அறிவிப்புக்கு மாநிலம் முழுவதும் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதன் காரணமாக தனிப்பட்ட விஷயங்களில் அரசு மூக்கை நுழைக்கிறது என பலரும் கூறுகிறார்கள். மேலும் இந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து ரயில்களில் பயணம் செய்யும்போது சத்தமாக பேசினாலோ அல்லது சத்தமாக பாடல் கேட்டாலோ அபராதம் வசூலிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் தேவைப்பட்டால் இயர் போனில் மட்டும் பாட்டு கேட்டுக்கொள்ளலாம் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் கேரள அரசும் பேருந்துகளில் இதுபோன்ற தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.