பேருந்து நிலையத்தில் காணாமல் போன வாலிபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் முத்துக்குமார் தனது சகோதரரான மதன்குமாருடன் சேர்ந்து கடந்த 19-ஆம் தேதி வாக்களித்து விட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் அருகே நடந்து சென்றுள்ளார்.
அப்போது திடீரென முத்துக்குமார் மாயமாகி விட்டார். இதனையடுத்து மதன்குமார் அவரை பல இடங்களில் தேடி கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மாயமான முத்துக்குமார் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.