கூலித் தொழிலாளியை சரமாரியாக வெட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள துரைசாமிபுரம் கிராமத்தில் கூலி தொழிலாளியான பிள்ளையார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மகளுடன் வீட்டின் வாசலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த இசக்கி ராஜா என்பவர் கையில் அரிவாளுடன் வந்து பக்கத்து வீட்டுப் பெண்ணான அமுதா என்பவரிடம் தகராறு செய்துள்ளார். இதனை பார்த்த பிள்ளையார் இசக்கிராஜாவை தட்டி கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த இசக்கிராஜா பிள்ளையாரை தான் வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த பிள்ளையாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பிள்ளையார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இசைக்கு ராஜாவை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.