ஈரான் தளபதியை கொன்று பெருமை பேசும் அமெரிக்கா பாகிஸ்தானிடம் மவுனம் காப்பது ஏன் என்று பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் விவகார நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஈரான் இராணுவத்தளபதி சோலிமானி கொல்லப்பட்டது குறித்து விளக்கம் அளித்த அமெரிக்கா டெல்லி முதல் லண்டன் வரையிலான பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு அவர் மூளையாக செயல்பட்டார் என்றும் அதனாலேயே அவர் கொல்லப்பட்டார் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் பயங்கரவாதி சோலிமானியை ஆளில்லா விமானம் மூலம் கொன்ற அமெரிக்கா அதே காரணத்திற்காக பாகிஸ்தான் ராணுவத் தளபதிகளை ஏன் கொள்ளக் கூடாது என்று பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் விவகார நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுகுறித்து ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த நிபுணர் ஒருவர் கூறுகையில்,
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கர்கள் 3,500 பேர் கொல்லப்பட்டதற்கு பாகிஸ்தான் தளபதிகள் தான் காரணம் என்றும் ஆனால் சோலிமானியை கொள்ள கையாண்ட வழி முறையை பாகிஸ்தான் ராணுவத் தளபதிகளை கொள்ள ஏன் கையாளக் கூடாது என்றும் கேள்வி எழுப்பிய அவர், பாகிஸ்தானுக்கு அமெரிக்கா நிதி உதவி அளிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்கர்களை பாகிஸ்தான் வைத்துக் கொள்வதாக அமெரிக்க ராணுவ கமாண்டர்களும், நாட்டு அதிகாரிகளும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இருப்பினும் ஆட்சிக்கு வரும் அரசுகள் இந்த விவகாரத்தில் நிதி உதவியை நிறுத்தி பாகிஸ்தானுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.