நடிகர் விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படத்தின் டீசர் வெளியாவது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமா உலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரின் மனதிலும் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் இவர் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தை நெல்சன் தீலிப்குமர் இயக்குகின்றார். கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கின்றார். மேலும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றது மற்றும் அனிருத் இசையமைக்கின்றார். அண்மையில் இத்திரைப்படத்தில் இருந்து அரபிக் குத்து பாடல் வெளியானது. வெளியான ஒரு மணி நேரத்திலேயே ஒரு மில்லியன் பார்வையாளர்கள் பார்த்திருந்தனர். தற்போது 7 மில்லியன் பார்வையாளர்களை கடந்து இருக்கின்றது.
இப்பாடலுக்கு திரையுலகினர் பலரும் நடனமாடி இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் அரபிக் பாடலைத் தொடர்ந்து தற்போது பீஸ்ட் திரைப்படத்தின் டீசர் வெளியாவுகள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இத்திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகும் என படக் குழுவினர் அண்மையில் அறிவித்திருந்தனர். இதனால் டீசர் இம்மாதத்தின் இறுதியில் அல்லது மார்ச் மாதத்தில் முதலில் வெளியாகக் கூடும் என கருதப்படுவது குறிப்பிடத்தக்கது. பீஸ்ட் திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் முடிய உள்ள நிலையில் டீசருக்கான பணியை பட குழு தீவிரமாக இறங்கியுள்ளது.