Categories
சினிமா

தனுஷ் என்னுடைய மருமகன் அல்ல…. என்னுடைய மகன்…. விட்டுகொடுக்காத ரஜினி…. என்னவொரு பாசம்….!!!

ரஜினிகாந்த் அவர்கள் தனது மருமகனான தனுஷை பற்றி நெருங்கியவர்களிடம் கூறியுள்ளது பற்றி தகவல் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா. இவர்கள் 2002ஆம் ஆண்டு காதலில் விழுந்தனர். பிறகு 2004 ஆம் ஆண்டு இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் கடந்த ஜனவரி 17-ஆம் தேதி பிரிவதாக தனித்தனியாக இணையதளத்தில் அறிவித்தனர். இருவரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் இவர்களை சேர்த்து வைக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இவர்கள் இருவரும் சேர்வதாக தெரியவில்லை. இச்செய்தியை அறிந்த ரஜினி ஐஸ்வர்யாவின் மீது கொண்ட கோபத்தினால் ஐஸ்வர்யா தனுஷ் இடம் சேர்ந்து வாழ்வதாக மனம் மாறினார். ஆனால் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை தனுஷ்.

நான் தனிமையில் இருந்து விடுகிறேன் என முடிவெடுத்து இருக்கின்றார் ஐஸ்வர்யா. இதனால் தனது பெயருக்கு பின்னால் இருக்கும் தனுஷ் பெயரை நீக்கிவிட்டு தனது அப்பாவின் பெயரான ரஜினிகாந்தை சேர்த்துள்ளார். இந்நிலையில் ரஜினி தன் நண்பர்களிடம் தனுஷ் பற்றி கூறியது தற்போது வெளியாகியுள்ளது. அவர் கூறியதாவது,தனுஷ் எனது மருமகன் அல்ல அவர் என்னுடைய மகன் என ரஜினி கூறியதை அவரின் நட்பு வட்டாரங்கள் கூறுகின்றனர். நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யாவின் திருமணத்துக்கு விருப்பம் இல்லை என்றாலும் மகளின் ஆசைக்காக ஒப்புக்கொண்டார். இருந்தபோதிலும் தனுசை ரஜினிகாந்த் எந்த இடத்திலும் விட்டுக் கொடுத்து பேசியதில்லை என கூறுகின்றனர் சுற்றத்தார்.

Categories

Tech |