வலிப்பு ஏற்பட்டு சலவை தொழிலாளி வாய்க்காலில் விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி பகுதியில் ராமதாஸ் (50) என்பவர் வசித்து வந்துள்ளார். சலவை தொழிலாளியான இவர் சம்பவத்தன்று அப்பகுதியிலுள்ள சில்லான்கரடு மஞ்சளாறு வாய்க்காலில் துணிகளை துவைத்து கொண்டிருந்தார். அப்போது ராமதாஸுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து அவர் வாய்க்காலில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தேவதானப்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சென்ற போலீசார் ராமதாஸின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.