Categories
உலக செய்திகள்

வேற லெவல்…!! “12 ஆண்டுகளுக்கு முன் காணமல்போன ஷோயி கிடைத்தது”…. குஷியில் உரிமையாளர்….!!

கலிபோர்னியா மாநிலத்தில் 12 ஆண்டுகளுக்கு முன் காணமல் போன செல்லப்பிராணியானா  நாய் உயிருடன் மீட்கப்பட்டது. 

அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியா மாநிலம் லஃபிய்டி நகரை சேர்ந்தவர் மிச்சில். இவர் தனது வீட்டில் 2009ஆம் ஆண்டு முதல் ஷோயி என்ற செல்லப்பிராணி நாயை வளர்த்து வந்தார். இந்நிலையில் மிச்சில் கடந்த 2010ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வீட்டின் அருகில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது அவர் ஆசையாக வளர்த்த நாய் ஷோயி காணாமல் போனது தெரியவந்தது. அவர் ஷோயியை அக்கம் பக்கத்தில் மற்றும் வீடு முழுவதும் தேடி உள்ளார். ஆனால் ஷோயி எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்பதால்  விலங்குகள் நல அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரையடுத்து ஷோயி நாயின் கழுத்தில் போடப்பட்டிருந்த ‘மைக்ரோ சிப்’ உதவியுடன் தேடி வந்தனர். ஆனாலும் செல்லப்பிராணி ஷோயி கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து மைக்ரோ சிப் பொருத்தும் நிறுவனம் ஷோயி நாய் உயிரிழந்திருக்கலாம் என்று நினைத்து தேடும் பணியை நிறுத்தி விட்டனர். மேலும் 2011ஆம் ஆண்டு உயிரிழந்துள்ளதாகவும் பட்டியலிடப்பட்டது. இந்நிலையில் தான் செல்லமாக வளர்த்த நாய் உயிரிழந்துள்ளதால் மிச்சில் மிகுந்த வருத்தமடைந்தார்.

இதனால் 11 ஆண்டுகளுக்கு பிறகு செல்ல பிராணி நாய் ஷோயி தற்போது உயிருடன் இருப்பதாக தகவல் வந்துள்ளது. இந்த ஷோயி நாய் காணாமல் போன லஃபிய்டி நகரிலிருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் ஸ்டாக்டன் நகரில் ஒரு குப்பை தொட்டி அருகே உடல்நிலை மிகவும் மோசமடைந்து நிலையில் கிடைப்பதாக போலீசாருக்கும், விலங்குகள் நல ஆய்வாளர்களுக்கும் நேற்று சிலர் தகவல் கொடுத்தனர். இதனை அறிந்த போலீசார் மற்றும்  விலங்குகள் நல ஆய்வாளர்கள் அந்த நய்யை மீட்டு அதன் உடலில் கட்டியிருந்த ‘மைக்ரோ சிப்பை ஆய்வு செய்தனர். அதில் குறிப்பிட்டு இருந்த செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டபோது இது மிச்சில் உடைய செல்ல போன் என்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து  அந்த நாய் 2010ஆம் ஆண்டு காணாமல் போன ஷோயி என்பதும் உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து செல்லப்பிராணி ஷோயி கண்டு பிடிக்கப்பட்டது குறித்து உரிமையாளர் மிச்சில்க்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் 12 ஆண்டுகளுக்கு முன் காணமல்போன தனது செல்லப்பிராணி ஷோயி கண்டுபிடிக்கப்பட்ட தகவல் கேட்டு மிச்சல் மிகுந்த ஆனந்தமடைந்தார். அதன் பின்னர் உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டு செல்லப்பிராணி நாய் ஷோயி தனது உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Categories

Tech |