தாய் இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள மறைஞாயநல்லூர் சர்வகட்டளை பகுதியில் விவசாயியான நாகராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய தாயார் கமலாம்பாள் கடந்த 15 நாட்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். இதனால் மிகுந்த சோகத்திலிருந்து வந்த நாகராஜன் விஷம் அருந்தி மயங்கி விழுந்துள்ளார்.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக நாகராஜனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி நாகராஜன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.