கூரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வடுவூர் வடக்குத்தெரு பகுதியில் கூலி தொழிலாளியான மாடசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜான்சிராணி என்ற மனைவியும், கனிஷ்கா என்ற மகளும் இருக்கின்றனர். இவர்கள் இரவு நேரத்தில் தூங்கிக் கொண்டிருக்கும்போது கூரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதில் சிக்கிய மாடசாமி-ஜான்சிராணி தம்பதியினர் கத்தி கூச்சலிட்டனர்.
அந்த சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் மாடசாமி மற்றும் ஜான்சிராணி ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மாடசாமி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.