இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது லாரி மோதியதில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அடுத்துள்ள கீழசித்தூர்வாடி கிராமத்தில் சத்தியராஜ் (33) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சத்தியராஜ் வேலையை முடித்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது புதுப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி திடீரென சத்தியராஜ் மீது மோதியுள்ளது.
இந்த கோர விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சத்தியராஜின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திருவாடனை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.