இருசக்கர வாகனம் நிலைதடுமாறு கீழே விழுந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கூரியூர் பகுதியில் முகம்மது யாசின் (வயது 35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் சத்திரக்குடி பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது லாந்தை காலனி அருகே சென்ற போது இருசக்கர வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து முகம்மது யாசின் கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி வழியாக சென்றவர்கள் முகம்மது யாசினை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி முகம்மது யாசின் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ராமநாதபுரம் நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.