லாரி மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள சைதாப்பேட்டை பகுதியில் கரீம் முல்லாகான் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இருசக்கர வாகனத்தில் வேலூரில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ரத்தனகிரி பகுதியில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அரப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த நிலையில் பின்னால் வந்த லாரி திடீரென கரீம் முல்லாகான் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இந்த விபத்தில் கரீம் முல்லாகான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.