மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வில்லுக்குறி பகுதியில் இருக்கும் வெல்டிங் பட்டறையில் வின்சர் என்பவர் தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வின்சர் தனது மோட்டார் சைக்கிளில் மார்த்தாண்டம்- தேங்காப்பட்டணம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் வின்சர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் வின்சர் மற்றும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் பயணித்த 2 சிறுவர்கள் படுகாயமடைந்தனர். இதனை பார்த்ததும் வாகன ஓட்டிகள் 3 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே வின்சர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.