கோயில் உண்டியலை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள துத்திபட்டு பகுதியில் விநாயகர் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் கோவிலுக்குள் புகுந்து உண்டியலை திருடிச் சென்றுள்ளனர். அதன்பின் பூசாரி கோவிலை திறந்த போது உண்டியல் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இது பற்றி கோவில் நிர்வாகிகள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அதன் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது திருடு போன உண்டியல் தேவலாபுரம் ஆற்றின் அருகாமையில் கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. பின்னர் காவல்துறையினர் அங்கு சென்று பார்த்த போது மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து உண்டியலை மீட்டு கோவில் நிர்வாகியிடம் ஒப்படைத்துள்ளனர்.