விறுவிறுப்பாக நடந்த உழவர் சந்தையில் 24½ டன் காய்கறிகள் சுமார் 8½ லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் கோட்டை பகுதியில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறி மற்றும் பழங்களை விற்பனைக்காக கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம். அதன்படி நேற்று நடைபெற்ற உழவர் சந்தையில் சுமார் 24½ டன் காய்கறிகளும், 3¾ டன் பழங்களும் விற்பனைக்காக கொண்டுவந்து இருந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்றைய நிலவரப்படி கேரட் ஒரு கிலோவிற்கு 100 ரூபாய்க்கும், கத்தரிக்காய் 60 ரூபாய்க்கும், தக்காளி 10 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் 44 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 36 ரூபாய்க்கும், பீட்ரூட் 40 ரூபாய்க்கும், புடலங்காய் 20 ரூபாய்க்கும், இஞ்சி 36 ரூபாய்க்கும், வெண்டைக்காய் 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் உழவர் சந்தையில் மொத்தம் 8 லட்சத்து 58 ஆயிரத்து 760 ரூபாய்க்கு காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.