காட்டு யானை அரசு பேருந்தை வழிமறித்து சம்பவம் வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் கோவையில் இருந்து பில்லூர் அணை பகுதிக்கு அரசு பேருந்து ஒன்று சென்றுள்ளது. இந்த பேருந்து நீர் ஆடி என்ற மலை கிராமத்தின் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை பேருந்தை வழிமறித்தது.
இதனால் பேருந்தின் ஓட்டுனர் அச்சத்தில் வாகனத்தை சற்று தூரத்திலேயே நிறுத்திவிட்டார். இதனை அடுத்து காட்டு யானை அங்கும் இங்கும் உலா வந்து சிறிது நேரம் கழித்து வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.