கேரளாவில் விதிமுறைகளை மீறி கட்டிய அடுக்குமாடி குடியிருப்புகளை உச்சநீதிமன்றத்தின் அறிவுரையின் படி வெடிமருந்து நிரப்பி வெடிக்க வைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விதிகளை மீறி கட்டப்பட்ட மாரடி அடுக்குமாடி குடியிருப்புகளை இடிப்பதற்கான இறுதிகட்ட நடைமுறைகள் தொடங்கி உள்ள நிலையில், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் மாரடி பகுதியில் கடலோர மண்டல விதிகளை விதிகளை மீறி கட்டப்பட்ட நான்கு அடுக்குமாடி குடியிருப்புகளை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி வரும் 11ம் தேதி அன்று அந்தக் கட்டிடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் வெடிவைத்து தகர்க்கப்பட உள்ள நிலையில், அவற்றை சுற்றி 200 மீட்டர் தொலைவில் உள்ள வீடுகளில் இருந்தும் பொது மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் அருகில் உள்ள வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டால் இழப்பீடு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு கட்டிடம் முழுவதும் வெடிபொருள்கள் நிரப்பும் பணி முடிவடைந்த நிலையில், வெளிநாடுகளை சேர்ந்த நிபுணர்கள் இந்த வெடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.