Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனத்தில் சாகசம்…. வசமாக சிக்கிய மாணவர்கள்…. பெற்றோருக்கு அறிவுரை….!!

இருசக்கர வாகனத்தில் சாகசம் புரிந்த மாணவர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் புறவழிச்சாலையில் சரக்கு வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் வாலிபர்கள் சிலர் விபரீதமான முறையில் இருசக்கர வாகனங்களில் சாகசத்தில் ஈடுபடுவதாகவும் மற்றும் சாலையில் அதிவேகமாக செல்வதாகவும் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அங்கு விரைந்து சென்றுள்ளனர். அப்போது 7 வாலிபர்கள் இரண்டு கைகளையும் விட்டபடி இருசக்கர வாகனத்தை ஓட்டிச் செல்லுதல் மற்றும் வேகமாக செல்லுதல் போன்ற விபரீதமான முறையில் ஈடுபட்டதை காவல்துறையினர் பார்த்தனர். பின்னர் அவர்களை காவல்துறையினர் சுற்றி வளைத்து பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

அந்த விசாரணையில் அவர்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் என்பதும், 5 இருசக்கர வாகனங்களில் சாகசத்தில் ஈடுபட்டதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. பின்னர் அவர்கள் அனைவரும் 18 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் என்பதால் அவர்களின் பெற்றோர்களை வரவழைத்து அவர்களிடம் இருசக்கர வாகனங்களை வழங்கக்கூடாது எனவும், அதிவேகமாக ஓட்டிச் சென்று விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் அறிவுரை வழங்கியுள்ளார். இதனை தொடர்ந்து அவர் மாணவர்களின் எதிர்கால நலன் கருதி அவர்களுக்கு அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பி வைத்துள்ளார்.

Categories

Tech |