Categories
தேசிய செய்திகள்

OMG: டீ குடிக்கும் போதா…? முதியவர் வயிற்றில் இருந்த பொருள்…. அதிர்ந்துபோன மருத்துவர்கள்….!!!

பீகார் மாநிலத்தில் உள்ள முசாஃபர் நகரை சேர்ந்த முதியவர் (வயது 55) ஒருவருக்கு மலச்சிக்கல் மற்றும் அடிவயிறு வலி ஏற்பட்டுள்ளது. இதனால் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக வந்த நிலையில், மருத்துவர்கள் அவருக்கு ஸ்கேன் மற்றும் எக்ஸ்-ரே எடுத்துப் பார்த்தபோது அவரது வயிற்றினுள் ஒரு பெரிய பொருள் இருந்தது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து அந்தப் பொருளை அவரது ஆசன வாய் வழியாக வெளியே எடுக்க மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர். ஆனால் அவ்வாறாக எடுக்க முடியவில்லை.

இதன் பின் அறுவை சிகிச்சை செய்தபோதுதான் டீ குடிக்கும் டம்ளர் உள்ளே இருப்பது தெரியவந்தது. ஆனால் இந்த டம்ளர் எப்படி இவர் குடலுக்குள் வந்தது என புரியாத புதிராக மருத்துவர்களுக்கு உள்ளது. எனவே இச்சம்பவம் குறித்து அவரின் குடும்பத்தாரிடம் விசாரித்தபோது, அவர் டீ குடிக்கும்போது டம்ளரை விழுங்கி விட்டதாக கூறுகின்றனர்.

ஆனால் அதற்கு மருத்துவ ரீதியாக வாய்ப்புகள் இல்லை மற்றும் சாத்தியமாகாது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும் இந்த டம்ளரை அவரது ஆசனவாய் வழியாக மட்டுமே உள்ளே அனுப்பி இருக்க முடியும் என்று மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகின்றது. இந்நிலையில் அவரது குடும்பத்தினர் இது குறித்து தகவல்களை பகிர மறுக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |