Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீட்டு வாசலில் நிறுத்திய புல்லட் பைக் மாயம்….. அடையாளம் காட்டிய CCTV….. திருடனுக்கு போலீஸ் வலைவீச்சு…!!

சென்னையை அடுத்த ஆவடியில் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த SOFTWARE என்ஜினீயர் ஒருவரின் புல்லட் பைக்கை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்ற  சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

சென்னைஆவடியை அடுத்த பகுதியில்  SOFTWARE என்ஜினீயர் ஒருவர் தனது விலையுயர்ந்த புல்லட்  பைக்கை வீட்டு வாசலில் நிறுத்தி வைத்துவிட்டு வெளியில் சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்த பொழுது பைக்கை காணவில்லை. பின் அருகிலுள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகளை ஆராய்ந்த பொழுது மர்ம நபர் ஒருவர் சைடு லாக்கை உடைத்து பைக்கை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. பின் காவல்நிலையத்தில் புகார் அளிக்க பைக் திருடனை அதிகாரிகள்  வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |