Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“ஏன் வேலைக்கு போகவில்லை” மகளின் சாவில் சந்தேகம்…. கடலூரில் பரபரப்பு….!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்திலுள்ள புலிவலம் பகுதியில் கருப்பையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அறிவுக்கரசி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் இருவரும் 4 வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கருப்பையன் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். அப்போது அறிவுக்கரசி கருப்பையனிடம் ஏன் வேலைக்கு செல்லவில்லை என கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

பின்னர் கருப்பையன் வெளியே சென்ற நிலையில் அறிவுக்கரசி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அறிவுக்கரசியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அறிவுக்கரசி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து செல்வமணி தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |