Categories
மாநில செய்திகள் வானிலை

JAN-8ஆம் தேதி வரை….. தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு….. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழகம் மற்றும் கர்நாடகத்தை  ஒட்டிய சில பகுதிகளில் வறட்சி நிலவுவதால் மக்கள் வேதனையில் உள்ளனர். வடகிழக்கு பருவ மழை  அதிக அளவில் பொழிந்தாலும், எதிர்பார்த்த அளவு பல இடங்களில் கை கொடுக்க வில்லை. சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களின் நீர் தேவையை பூர்த்தி செய்ய இன்னும் மழையானது தேவைப்படுகிறது. இவ்வாறு இருக்கையில்,

தமிழகம் மற்றும் கர்நாடக எல்லையை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சூழற்சி ஏற்பட்டுள்ளதால் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வருகின்ற 8 ஆம் தேதி வரை  மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் அதன்பிறகு மழை குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |