தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்த நிலையில் மதுரை திருமங்கலத்தில் நள்ளிரவில் பொங்கல் பரிசுக்கான டோக்கன்கள் வழங்கப்பட்டன.
உள்ளாட்சித் தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக பொங்கல் பரிசு வழங்குவது தொடர்பான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் திருமங்கலம் அருகே உள்ள ஊராட்சி மன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ள நிலையில்,
நேற்று இரவு 12 மணியளவில் பாண்டியநாடு ரேஷன் கடையை திறந்து மக்களுக்கு ஆயிரம் ரூபாய் உள்ளிட்ட பொங்கல் பரிசு வழங்குவதற்காக டோக்கன்கள் காவல்துறையினரின் பாதுகாப்புடன் வழங்கப்பட்டன. இதனை வாங்க மக்கள் கூட்டம் அங்கு அலைமோதியது.