Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ காலிப்பணியிடங்களுக்கான தேர்வு…. தேதி மாற்றம்?…. வலுக்கும் கோரிக்கை….!!!!

டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் பிப்ரவரி 23-ஆம் தேதி அன்று டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் தேர்வர்கள் ஞாயிற்றுக்கிழமை அன்று தேர்வை நடத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் தொழில் துறை ஆணையர் மற்றும் வணிகம், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவை பிரிவு, நகராட்சி ஆணையர், வணிக வரி அதிகாரி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, கூட்டுறவு சங்க ஆய்வாளர், நுகர்வோர் பாதுகாப்பு துறை, ஸ்டெனோ டைப்பிஸ்ட், நன்னடத்தை அதிகாரி, உதவி ஜெயிலர், தணிக்கை ஆய்வாளர், ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட பதவிகளுக்கு குரூப் 2, குரூப் 2ஏ போன்ற போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக இந்த தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 5,831 காலிப்பணியிடங்களுக்கான குரூப்-2 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் ஒரு துறையில் இளநிலைப்பட்டம் பெற்றவர்கள் இந்த குரூப்-2 தேர்வை எழுதலாம். தேர்வருடைய வயது வரம்பு 30-க்கும் மிகாமல் இருக்க வேண்டும். அதாவது இந்த வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு மட்டுமே பொருந்தும். வயது வரம்பில் மற்ற பிரிவினருக்கு சலுகைகள் உண்டு. இந்த மாதம் 23-ஆம் தேதி குரூப்-2, 2ஏ தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

அதனை தொடர்ந்து மே 21-ஆம் தேதி அன்று தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் தேர்வு நடைபெறும் தேதியை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஏனென்றால் மே 21 சனிக்கிழமை என்பதால் தேர்வர்கள் வேலைக்கு செல்ல முடியாத சிக்கல் எழுந்துள்ளது. எனவே குரூப்-2, 2ஏ தேர்வுகளை ஞாயிற்றுக்கிழமை நடத்த வேண்டும் என்று தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் பிப்ரவரி 23-ஆம் தேதி வெளியாகும் அறிவிப்பில் மாற்று தேதி குறித்த அறிவிப்பும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |