திமுக தொண்டரை தாக்கிய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு 8.30 மணிக்கு கைது செய்யப்பட்ட ஜெயக்குமார் 4 மணி நேரம் கழித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். ஜெயக்குமார் தரப்பு ஜாமீன் மனு 23ஆம் தேதி விசாரணைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டார்.
Categories