Categories
அரசியல் மாநில செய்திகள்

திபுதிபுவென புகுந்த போலீஸ்…! ஜெயக்குமார் வீட்டிற்குள் நடந்தது என்ன ? வைரலாகும் வீடியோ …!!

தேர்தல் நாளன்று திமுக தொண்டரை தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட 50 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதேபோல திமுகவினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் மீது நடவடிக்கையாக நேற்று இரவு எட்டு முப்பது மணி அளவில் திடீரென முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வீட்டிற்குள் நுழைந்த போலீஸ் அவரை கைது செய்தது.

4 மணி நேரம் கழித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜெயக்குமார் இவருக்கு நீதிபதி 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார் இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த கைது நடவடிக்கையில் போது திபுதிபுவென முன்னாள் அமைச்சர் வீட்டிற்குள் நுழைந்த போலீசிடம், நாங்க ஒத்துழைப்பு கொடுக்க ரெடி. நீங்கள் உள்நுழையும் போது என்னை தள்ளிவிட்டு நுழைந்தீர்கள.  நான் வாறேன். நான் ஓட மாட்டேன். நான் நான் வாரேன் என்று தான் சொல்கின்றேன் என்று வாக்குவாதம் செய்யும் வீடியோ வைரலாகி வருகின்றது.

 

 

Categories

Tech |