தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று முடிவுகள் அறிவிப்பு. மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல், 808 மையங்களில் எண்ணப்படுகின்றன. சென்னையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 15 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, அறிவிக்கப்பட்டு வருகின்றது.
தமிழகத்தில் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணும் மையங்களில் 40 ஆயிரத்து 910 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை முடிந்தபின் பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க 60 ஆயிரம் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டவுள்ளனர். வாக்கு எண்ணிக்கை மையங்களில் 11 ஆயிரத்து 797 சிசிடிவி கேமராக்கள் கண்காணிக்கின்றன. இந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி இதில் 218 இடங்களில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகி இருக்கின்றார்கள்.
21 மாநகாட்சிகளில் உள்ள 1 மாநகராட்சி வார்டில் திமுக அன்னபோஸ்ட்டாக போட்டியின்றி தேர்வாகியுள்ளது. 138 நகராட்சிகளில் உள்ள 9 வார்டில் திமுக அன்னபோஸ்ட்டாக போட்டியின்றி தேர்வாகியுள்ளது. 489 பேரூராட்சிகளில் உள்ள வார்டுகளில் 36 இடங்களில் திமுக அன்னபோஸ்ட்டாக போட்டியின்றி தேர்வாகியுள்ளது. அதே போல 489 பேரூராட்சிகளில் உள்ள வார்டுகளில் பிற கட்சிகள் 10, அதிமுக 1 வார்டுகளில் போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.
வாக்கு எண்ணிக்கை சற்று முன் தொடங்கியுள்ள நிலையில், அதற்க்கு முன்னதாகவே மாநிலம் முழுவதும் போட்டியின்றி திமுகவினர் வெற்றிபெற்றதும் தேர்தல் முடிவுகளில் அறிவிக்கப்பட்டது, திமுகவினரை மகிழ்ச்சி அடையவைத்துள்ளது. திமுக ஜெட் வேகத்தில் முன்னிலை பெற்று வெற்றிபெறும் என சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றது.