லாரி மீது சரக்கு வாகனம் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் பாவனை பகுதியில் பிரபு என்பவர் வசித்து வருகின்றார். இவரும், இவரது மனைவி சிவகாமி சுந்தரியுடன் சேர்ந்து அப்பகுதியில் கடை ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று சிவகாமி சுந்தரி கடைக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு சரக்கு வாகனத்தில் டிரைவர் துரைக்கண்ணன் மற்றும் பணியாளர் பிரகாஷ் ஆகியோர் சேலத்திற்கு சென்றுள்ளனர். இதனையடுத்து கடைக்கு தேவையான பொருட்களை வாங்கி விட்டு மீண்டும் ஈரோடுக்கு சென்று கொண்டிருந்தனர்.
இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வழியாக சென்று கொண்டிருந்த போது வளையக்காரனூரில் அருகே வைத்து சரக்கு வாகனம் முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் சிவகாமி சுந்தரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் சரக்கு வாகனத்தை ஓட்டி சென்ற துரைக்கண்ணன் மற்றும் பிரகாஷ் ஆகிய இருவரும் படுகாயமடைந்துள்ளனர். இதனை பார்த்த அப்பகுதி வழியாக சென்றவர்கள் படுகாயமடைந்தவர்களை மீட்டு ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து குமாரபாளையம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.