மீன் பிடிக்க சென்ற தொழிலாளி ஏரியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆதனூர் கிராமத்தில் கட்டிட தொழிலாளியான வேலு என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று அதே பகுதியில் உள்ள ஏரியில் மீன் பிடிக்க சென்றுள்ளார். அப்போது திடீரென வேலு கால் தவறி தண்ணீருக்குள் விழுந்துவிட்டார்.
இந்நிலையில் வேலுவின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அரை மணி நேரம் போராடி வேலுவை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் வேலு ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.