Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

தாமதமாக திறக்கப்பட்ட ரயில்வே கேட்…. பொதுமக்கள் அவதி…. அதிகாரிகளுக்கு கோரிக்கை…!!

இரயில்வே கதவு  1 மணிநேரம் திறக்கப்படாததால்  போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலம் பகுதியில் ரயில்வே நிலையத்தில் சரக்கு ரயில் 1 வது நடைமேடையில் வந்து நின்றுள்ளது. அதனைத் தொடர்ந்து சென்னையில் இருந்து மன்னார்குடி செல்லும் மன்னை எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்றுள்ளது. அதில்  வந்த பயணிகள் அனைவரும் இறங்கிய பின்னர் அந்த ரயில் அங்கிருந்து கிளம்பியுள்ளது. அதன் பிறகு சரக்கு ரயிலின் இயந்திர திசை மாற்றப்பட்டு சரக்கு ரயில் அங்கிருந்து கிளம்பியுள்ளது. இதனால் அந்தப் பகுதியில் ரயில்வே கதவு ஒரு மணி நேரம் தாமதமாக திறக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக  சாலைகளின் இரண்டு பக்கமும் வாகனங்கள் அனைத்தும் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தன. இதனால்  வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் நீடாமங்கலம் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதாகவும், இரண்டு வழி சாலை திட்ட பணிகளை விரைவில் செய்து முடிக்க வேண்டும் எனவும், ரயில்வே  மேம்பாலத்தின் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |