Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப ராசிக்கு…”பாராட்டுகளைப் பெறுவீர்கள்”.. உயர் பதவிகள் கிடைக்கக்கூடும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே…!! இன்று பிற்பகலில் பிரச்சனைகள் தீரும் நாளாக இருக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். இதுவரை சந்திக்காதவர்களை சந்திப்பீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. பாக்கிகள் வசூலாகி பரவசம் படுத்தும். இன்று நேர்மையாக சிறப்பான பணிகளை செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். உயர் பதவிகள் கிடைக்கக்கூடும் .

எல்லாவகையிலுமே உங்களுக்கு நன்மை ஏற்படும். தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தடைப்பட்ட காரியங்கள் சாதகமாக முடியும். பண வரவு சிறப்பாக இருக்கும். தடைகள் நீங்கி முன்னேற்றமும் காண்பிர்கள். இன்று மாணவர்களுக்கு கல்வியில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். மேற்கல்விக்கான  முயற்சியில் வெற்றி கிடைக்கும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.

இன்று முக்கியமான பணியில் நீங்கள் மேற்கொள்ளும் ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று சிவபெருமான் வழிபாட்டை  மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |