Categories
மாநில செய்திகள்

#breaking: சென்னையில் 3-வது இடத்திற்கு தள்ளப்பட்ட திமுக…..!!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (பிப்.22) காலை 8 மணி அளவில் தொடங்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

அதன்படி சென்னையில் 200 வார்டுகளில் பதிவான வாக்குகள் 15 மையங்களில் எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள், வேட்பாளர்களின் முகவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னையில் 23 வது வார்டில் தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் ராஜன் அபார வெற்றி பெற்றுள்ளார். 3-வது மண்டலமான மாதவரத்தின் 23 வது வார்டில் பணப்பட்டுவாடா, பரிசுப்பொருட்கள் கொடுத்ததை மீறி அதிமுக, திமுகவை வீழ்த்தி சுயேச்சை வேட்பாளர் ராஜன் 1000 வாக்குகளுக்கு மேல் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். ராஜன்- 3,953, அதிமுக-2,369, திமுக-2,271 வாக்குகள் பெற்றுள்ளன. ஆளும் கட்சியான திமுக இந்த வார்டில் 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது..

Categories

Tech |