கடகம் ராசி அன்பர்களே…!! இன்று குடும்பச் சுமை கூடும் நாளாக இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். அதிகாரிகளால் அனுகூலம் கிடைக்கும். அன்பு நண்பர்களின் ஆதரவும் உண்டாகும். வியாபாரத்தில் விருத்தி ஏற்படும். உடன்பிறப்புகள் வழியில் ஏற்பட்ட உபத்திரம் மாறும். மங்கள செய்தி ஒன்று விடு வந்து சேரும். சிலருக்கு புதிய வேலையும் கிடைக்க கூடும். குடும்பத்தில் சகஜ நிலை காணப்படும்.
கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். உறவினர்கள் வகையில் செலவு கொஞ்சம் ஏற்படலாம். நண்பர்களால் இருந்து வந்த கருத்து வேற்றுமை அகலும். இன்றைய நாள் ஆலயம் சென்று வாருங்கள் நிம்மதியாக காணப்படும். இன்று மாணவகண்மணிகள் கல்விக்காக கடுமையாக உழைப்பீர்கள். கல்வியில் வெற்றியும் பெறுவார்கள்.
இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு சொல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் இளம் நீல நிறம்