2 மோட்டார் சைக்கிள் மோதி விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி பகுதியில் வீரசிங் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வீட்டிற்கு பால் வாங்கிக் கொண்டு திருப்பத்தூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக விக்னேஷ் என்பவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி வீரசிங்கின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியுள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த விக்னேஷ், வீரசிங், ஆகிய 2 பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி விரசிங் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்