சிவகங்கை நகராட்சியில் 27 வார்டுகள் இருக்கின்றன. முதல் வார்டில் அதிமுக சார்பாக ராஜ்குமாரன், காங்கிரஸ் சார்பில் மகேஷ்குமார், பாஜக சார்பில் மனோகரன், அமமுக சார்பில் பழனி, நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகேயதுரை, மணிமகள் சார்பில் செங்கோல் உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் சிவகங்கை 1வது வார்டில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் படுதோல்வி அடைந்து உள்ளார். அங்கு போட்டியிட்ட மநீம வேட்பாளர் செங்கோல் ஒரு வாக்கு கூட பெறவில்லை.