Categories
மாநில செய்திகள்

புதிய ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. அடுத்த மாதம் முதல்… தமிழக அரசு அதிரடி….!!!!

புதிய குடும்ப அட்டை விண்ணப்பித்தவர்களுக்கு ஸ்மார்ட் ரேஷன் அட்டைகள்   விரைவில் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் புதிதாக ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு உடனே வழங்குமாறு சில மாதங்களுக்கு முன்பு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். ஆனால் பலர் ஒரே நேரத்தில் விண்ணப்பித்ததால் அட்டைகளை விநியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் ரேஷன் அட்டை கேட்டு விண்ணப்பித்தோரில் தகுதியான 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு அரிசி அட்டைகள் உடனே வழங்க அதிகாரிகள் ஒப்புதல் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து பயனாளிகளின் கைப்பேசிக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பப்பட்டது.  பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமென மாநில தேர்தல் ஆணையம்  ஜனவரி26 ஆம் தேதி அறிவித்தது. இதனால் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் தேர்தல் முடிந்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், அடுத்த மாதம் முதல் புதிய அட்டைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, பயனாளிகள் ரேஷன் பொருட்களை வாங்கும் வகையில் அவர்களுக்கான ஸ்மார்ட் கார்டுகள் விரைந்து வழங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்த தகவல் தமிழக மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |