Categories
கிரிக்கெட் விளையாட்டு

PAK VS AUS :ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான ஆஸி அணி அறிவிப்பு ….முக்கிய வீரர்களுக்கு ஓய்வு ….!!!

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள ஆஸ்திரேலியா அணி டெஸ்ட்,ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுகிறது.கடந்த 1998-ம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி  பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவதால் இத்தொடருக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது .இதனிடையே மார்ச் மாதம் பாகிஸ்தானுக்கு செல்லும் ஆஸ்திரேலிய அணி  3 டெஸ்ட், 3 ஒருநாள், 1 டி20 என மூன்று தொடர்களிலும் விளையாடுகிறது .

இதில் டெஸ்ட் தொடர் மார்ச் 4-ம் தேதியும், ஒருநாள் தொடர் மார்ச் 29-ம் தேதியும் நடைபெற உள்ளது . மேலும் டி20 போட்டி ஏப்ரல் 5 -ல்  நடைபெறுகிறது. இந்நிலையில் டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் முன்னணி வீரர்கள் டேவிட் வார்னர், கிளென் மேக்ஸ்வெல், பாட் கம்மின்ஸ், ஜொஷ் ஹசில்வுட், மிட்செல் ஸ்டார்க் ஆகியோருக்கு இத்தொடரிலிருந்து ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய ஒருநாள் & டி20 அணி: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), சீன் அபோட், ஆஷ்டன் அகர், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், அலெக்ஸ் கேரி, நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மார்னஸ் லாபுசாக்னே, மிட்செல் மார்ஷ், பென் மெக்டெர்மொட், கேன் ரிச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆடம் ஸாம்பா.

Categories

Tech |