Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வாக்குப்பதிவில் முறைகேடு…. நடைபெற்ற மறுவாக்குப்பதிவு…. பலத்த போலீஸ் பாதுகாப்பு…!!

சென்னையில் உள்ள இரண்டு தொகுதிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள திருவான்மியூர் பகுதியில் கடந்த  19 ஆம் தேதி 179 வது பகுதிக்கான வாக்குப்பதிவு மாநகராட்சி ஆரம்ப பள்ளியில் வைத்து நடைபெற்றுள்ளது. காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு பெற்றுக் கொண்டிருந்த நிலையில் ‌மாலை 3 மணி அளவில் மர்ம நபர்கள் சிலர் வாக்குச்சாவடிக்குள் நுழைந்து வாக்குப்பதிவு இயந்திரத்தை தூக்கி வீசியுள்ளனர். இதனால் அந்த பகுதியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் மாநில தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி தேர்தல் ஆணையம் அந்த பகுதிக்கான வாக்குப்பதிவை ஒத்தி வைத்துள்ளது. இந்நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மறுவாக்குப்பதிவு நேற்று நடைபெற்றுள்ளது. வாக்குப்பதிவு நிறைவடைந்த பிறகு வேட்பாளர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் சீல் வைக்கப்பட்டு ஓட்டு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பழைய வண்ணாரப்பேட்டையில் 51 வது பகுதியில் கள்ளஓட்டு போடபட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்திற்கு தகவல் வந்துள்ளது. இந்த தகவலின் படி அந்தப் பகுதியில்  தேர்தல்  ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கிழக்கு கல்லறை சாலையில் அமைந்திருக்கும்  சென்னை உருது தொடக்கப் பள்ளியில் பழைய வண்ணாரப்பேட்டை பகுதிக்கான  மறு வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றுள்ளது. அப்போது  காவல்துறையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். இந்தப்பகுதியில்  தேர்தல் முடிவடைந்த பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு ஓட்டு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |