தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காயல்பட்டினம், கோவில்பட்டி, திருச்செந்தூர் ஆகிய 3 நகராட்சிகளிள் 2இல் திமுகவே ஆதிக்கம் செலுத்திவருகிறது.
18வார்டுகளை கொண்ட காயல்பட்டினம் நகராட்சியில் அறிவிக்கப்பட்ட 17வார்டு முடிவில்,
திமுக 4 இடங்களிலும், சுயேச்சை 13 இடங்களையும் கைப்பற்ற்றியுள்ளதாக முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
36 வார்டுகளை கொண்ட கோவில்பட்டி நகராட்சியில் 25 இடங்களில் திமுக கூட்டணியும், அதிமுக 5 இடங்களிலும், பாஜக ஒரு இடங்களிலும், அமுமுக ஒரு இடங்களிலும் சுயேச்சை மூன்று இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
27 வார்டுகளை கொண்ட திருச்செந்தூர் நகராட்சியில் 22 இடத்தில் திமுகவும், 2இடத்தில் அதிமுகவும், சுயேச்சை 3 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளதாக முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சியில் 50வார்டுகளை வென்ற திமுக, மாநகராட்சியை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.