இயற்கை எரிவாயு தட்டுப்பாட்டின் காரணமாக கேஸ் விலை இருமடங்காக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச அளவில் எரிவாயு தட்டுப்பாடு கடுமையாக உள்ள நிலையில் கேஸ் விலை விரைவில் இரு மடங்காக விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே எரிவாயு விலை தலைவலியாக உள்ள நிலையில் தற்போது மேற்கொண்டு விலை உயரும் என்பது பொதுமக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. இந்நிலையில் இயற்கை எரிவாயுவிற்கான டிமாண்ட் அதிகரித்துள்ள போதிலும் எரிவாயு உற்பத்தி சரிந்து கொண்டே வருகிறது.
இதன் காரணமாக சர்வதேச அளவில் எரிவாயுவிற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலும் பல்வேறு நிறுவனங்கள் எரிவாயு கொள்முதலை குறைத்துள்ளன. தற்ப்போதைய சூழ்நிலையில் நிலைமை கட்டுக்குள் இருந்தாலும், ஏப்ரல் மாதம் முதல் எரிவாயு பற்றாக்குறையின் சுயரூபம் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இயற்கை எரிவாயு விலை ஏப்ரல் மாதம் மத்திய அரசு திருத்த உள்ளது.
சர்வதேச நிலவரத்திற்கு ஏற்ப விலை திருத்தம் செய்யப்படும் எனவும் கூறுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், அக்டோபர் மாதங்களில் இயற்கை எரிவாயு விலையை மத்திய அரசு திருத்துகிறது. அதன்படி ஏப்ரல் மாதம் எரிவாயு விலை இரு மடங்குக்கு மேல் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயு விலை ஒரு டாலர் உயர்வுக்கும் இந்தியாவில் 4.5 ரூபாய் உயரும். மேலும் இயற்கை எரிவாயு வீடுகளிலும் வாகனங்களிலும் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கதாகும்.