Categories
அரசியல் மாநில செய்திகள்

அச்சச்சோ…! யாருமே ஓட்டு போடலை…. அதிமுகவுக்கு இப்படி ஒரு நிலையா ?

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று  முடிவுகள் அறிவிப்பு. மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல், 808 மையங்களில் எண்ணப்படுகின்றன. சென்னையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 15 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, அறிவிக்கப்பட்டு வருகின்றது.

தமிழகத்தில் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணும் மையங்களில் 40 ஆயிரத்து 910 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை முடிந்தபின் பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க 60 ஆயிரம் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டவுள்ளனர். வாக்கு எண்ணிக்கை மையங்களில் 11 ஆயிரத்து 797 சிசிடிவி கேமராக்கள் கண்காணிக்கின்றன.

இதில் 218 இடங்களில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகி இருக்கின்றார்கள். இந்த நிலையில்  தற்போதைய நிலவரப்படி திமுகவே முன்னணி வகுக்கின்றது. இந்நிலையில்  சிவகங்கை 1-வது வார்டில் மக்கள் நீதி மையம் கட்சி யின் செங்கோலன் ஒரு வாக்கு கூட பெறவில்லை. அதே போல புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேரூராட்சியில்  அதிமுகவின் முகம்மது இப்ராஹீம்ஷா ஒரு வாக்கு கூட பெறவில்லை. கறம்பக்குடி பேரூராட்சியில் சுயேச்சை வேட்பாளர் பிருத்விராஜ் வெற்றி பெற்றார்.

Categories

Tech |