தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று முடிவுகள் அறிவிப்பு.மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல், 268 மையங்களில் எண்ணப்படுகின்றன. சென்னையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 15 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, அறிவிக்கப்பட்டு வருகின்றது.
தமிழகத்தில் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணும் மையங்களில் 40 ஆயிரத்து 910 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை முடிந்தபின் பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க 60 ஆயிரம் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டவுள்ளனர். வாக்கு எண்ணிக்கை மையங்களில் 11 ஆயிரத்து 797 சிசிடிவி கேமராக்கள் கண்காணிக்கின்றன.
இந்த நிலையில் சிவகங்கை நகராட்சி 1-வது வார்டில் மக்கள் நீதி மையம் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் படுதோல்வி அடைந்துள்ளார். வேட்பாளர் செங்கோல் ஒரு வாக்கு கூட பெறவில்லை. இந்த வேட்பாளரின் குடும்பத்தினர், உறவினர் கூட அவருக்கு வாக்களிக்கவில்லையா ? என்ற கேள்வி எழுகிறது. அதற்கு மேல் அந்த வார்டில் வேட்பாளருக்கு வாக்கு இருக்குமே அவர்கூட அவருக்கே ஓட்டு போட்டுக் கொள்ளவில்லையா ? என நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர்.