மலை சிகரத்திற்கு செல்லும் சாலையில் நடைபெறும் சீரமைப்பு பணிகளை விரைவாக முடிக்குமாறு அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டிக்கு அருகில் தொட்டபெட்டா மலைப்பிரதேசம் உள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக தொட்டபெட்டா மலைப்பகுதி அடைக்கப்பட்டுள்ளளது. அதன்பின் அங்கு பெய்த மழையின் காரணமாக தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு செல்லும் சாலைகள் சேதமடைந்துள்ளன. அந்த சாலைகளை சரி செய்யும் பணியை மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலகம் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் சாலைகளின் இரண்டு பக்கமும் மண்சரிவு ஏற்படுவதை தடுக்கும் விதமாக தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து சாலைகளில் தேங்கும் மழைநீர் செல்வதற்காக பெரிய குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் சாலைப்பணிகள் முழுமையாக முடிவடையாமல் இருப்பதால் கடந்த 10 மாதங்களாக சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படாமல் இருக்கிறது. எனவே சாலை பணிகளை விரைவில் முடித்து தொட்டபெட்டா மலைப்பகுதிக்கு அனுமதி வழங்க வேண்டுமென பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.