Categories
சினிமா தமிழ் சினிமா

களைகட்டியது….! “தயாரிப்பாளர் அன்புசெழியன் இல்ல திருமண விழா”…. மணமக்களை வாழ்த்த வந்த பிரபலங்கள்….!!

அன்புச்செழியனின் மகள்  திருமணம் நேற்று காலை அரசியல் பிரமுகர்கள், பிரபலங்கள், பத்திரிகை ஊடக நண்பர்கள் ஆகியோர் முன்னிலையில் இனிதே நடைபெற்றுள்ளது. 

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் கோபுரம் பிலிம்ஸ் உரிமையாளர், பைனான்ஸியர்,  திரையரங்கு உரிமையாளர், திரைப்பட விநியோகஸ்தர் ஆன அன்புசெழியனின் மகள் சுஷ்மிதாவுக்கு இன்று திருமணம் நடைபெற்றது. அன்புச்செழியனின் மகள் சுஷ்மிதாவுக்கு, சன் ஐஏஎஸ் அகாடமியின் இயக்குநர் சரண் இருவருக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது. இதனைத் தொடர்ந்து அன்புச்செழியனின் தனது மகளின் திருமண பத்திரிக்கையை ரஜினிகாந்த், கமலஹாசன் உட்பட பல சினிமா பிரபலங்களுக்கு கொடுத்து வந்தார். அந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வந்தன.

இந்நிலையில் அன்புச்செழியனின் மகள்  திருமணம் நேற்று காலை அரசியல் பிரமுகர்கள், பிரபலங்கள், பத்திரிகை ஊடக நண்பர்கள் ஆகியோர் முன்னிலையில் இனிதே நடைபெற்றது. இந்த திருமண விழாவில் தமிழ் சினிமா பிரபலங்கள் கமலஹாசன், ரஜினிகாந்த், தயாரிப்பாளர் போனி கபூர், வெங்கட் பிரபு, பிரபு, விக்ரம் பிரபு, விஜய் ஆண்டனி போன்ற பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதேபோல் அரசியல் பிரமுகர்கள் தங்கம் தென்னரசு, டிடிவி தினகரன், V V ராஜன், செல்லப்பா, வனிதா சீனிவாசன், எஸ் வி சேகர், எல் கே சதீஷ், எஸ் பி வேலுமணி, ஜெயக்குமார், ஆர் பி உதயகுமார், சேகர் பாபு, கு. பிச்சாண்டி, ராணிபெட் காந்தி போன்ற பலர் நேரில் வந்து மணமக்களை ஆசீர்வதித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Categories

Tech |