Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம….. விரைவில் ”சூர்யவம்சம் 2”….. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…..!!!

சூர்ய வம்சம் படத்தின் இரண்டாம் பாகம் வர இருப்பதாக சரத்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் சரத்குமார். இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் கடந்த 1994ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் ”சூர்யவம்சம்”. இந்த படத்தில் இரட்டை வேடத்தில் சரத்குமார் நடித்திருந்தார். மேலும், மணிவண்ணன், தேவயானி, ராதிகா, ஆனந்தராஜ் மற்றும் பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.

Surya Vamsam Movie Part 2 Shooting Start This August - Actor Sarathkumar |  Surya Vamsam Sarathkumar:

குடும்பங்கள் ரசிக்கும் இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இந்த படத்தின் இரண்டாம் பாகம் வருமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். அதற்கு பதிலளிக்கும் விதமாக, நடிகர் சரத்குமார் சமீபத்திய பேட்டி ஒன்றில், சூர்ய வம்சம் படத்தின் இரண்டாம் பாகம் கதை தயாராகி வருகிறது எனவும், ஆகஸ்ட் மாதத்தில் இந்த படத்தின் பணிகள் தொடங்க இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளனர்.

Categories

Tech |