மாவட்டம் முழுவதும் சோதனை செய்து 33 ரவுடிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் முடிவடைந்த நிலையில் ஓட்டு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. இந்த ஓட்டு எண்ணிக்கையின் போது எந்தவித பிரச்சனையும் ஏற்படாமல் தடுப்பதற்காக திருச்சி மாவட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் பல்வேறு மாநகராட்சிகளில் அதிகாலை 2 மணி முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சோதனையின் போது பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்து கொண்டிருந்த ரவுடிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மொத்தம் 33 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இவர்கள் மேல் தனித்தனியாக வழக்கு பதிவு செய்யப்பட்டு சம்பத்தப்பட்ட காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.