Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“சடலத்துடன் விழுந்து விடுகிறோம்” சிரமப்படும் கிராம மக்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

சுடுகாட்டுக்கு செல்ல பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேவ சமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய அக்ரஹாரம் கிராமத்தில் 70-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியில் இருக்கும் சுடுகாட்டுக்கு செல்ல பாதை இல்லாததால் பொதுமக்கள் உயிரிழந்தவர்களின் சடலத்தை வயல் வழியாக தூக்கி செல்கின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

இதனையடுத்து மழைக்காலங்களில் வயல்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால் பொதுமக்கள் இறந்தவரின் சடலத்துடன் கீழே விழுந்து செல்கின்றனர். எனவே சுடுகாட்டுக்கு செல்ல பாதை வசதி ஏற்படுத்தித் தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |